Tuesday, November 14, 2017

கதை தொடர்ச்சி

அத்தியாயம் 2

மாயக்குரல் கேட்ட மந்திரப்பாவை!

 குரல் மட்டும் தான் கேட்டதே தவிர அங்கே யாரையும் காண முடியவில்லை! சற்று முன் அங்கே நிலவிய மகிழ்ச்சி அலை நொடியில் அடங்கியது.

"யார்?  யார் அது ? முன்னால் வந்து பேசு!  கோழைபோல் ஒளிந்து கொண்டு பேசவேண்டாம்!"  முழங்கினார் இரத்தினசிம்மர்.

"ஹா ஹா ஹா ! நான் உன் முன்னாடி தான் நிற்கிறேன் உம்மால் தான் என்னை காண முடியாது"

"மாயமாய் மறைந்து கொண்டு பேசுவது யாராக அல்லது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் அவர்கள் கோழை என்பதில் மட்டும் ஐயம் இல்லை" 

 " என்ன திமிர் உனக்கு? இப்பொழுது பார் என் ஆற்றலை! என்னை நீ  கண்டால் பீதியில் உறைந்து போய் விடுவாய்!  என்றவுடன் அந்தரத்தில் ஒரு பயங்கரமான
கை தோன்றியது. நீண்டு வளைந்த கொக்கி போன்ற நகங்களும், அடர்ந்த ரோமங்களும் கொண்டு பார்ப்பவரை அச்சம் கொள்ள செய்தது அந்த கை தன் விரல்களை அசைக்க ஒளிக்கீற்று ஒன்று மந்திரி நாகசீலர் மீது பாய்ந்தது! மறுகணம் நாகசீலர் எலும்புக்கூடாக மாறினார்!  அதிர்ச்சியில் உறைந்து
போயினர்  மன்னரும்  மற்றவரும். இரத்தினசிம்மர்  தனது வாளினை உருவ முயன்றார், ஆனால் வாள் உரையை  விட்டு வரவில்லை. மீண்டும் இடிச்சிரிப்பு

அங்கே ஒலித்தது. "இன்னுமா என் ஆற்றல் உனக்கு புரியவில்லை? என 

கொக்கரித்தது. மந்திரி மதிவாணர் மட்டும் சமயோசிதமாய் தூணுக்கு பின்னே  மறைந்து கொண்டு தன்னை காத்து கொண்டார். மற்ற மந்திரிகள் அந்த மாயக்கையின் ஒளிபட்டு எலும்பு கூடுகளாய் விழுந்தனர், அபாயத்தை அறிந்து
ஓடி வந்த காவல் வீரர்களுக்கும் அதே கதி தான் ஏற்பட்டது!

   "நான் கண்ட கனவின் அர்த்தம் இது தானா? ஐயோ நான் என்ன செய்வேன்?"
 "இரத்தினசிம்மா!! உனக்கு வேடிக்கை காட்ட நான் வரவில்லை! நான் கேட்பதை
கொடுப்பதாக இருந்தால் நீயும் உன் குடிமக்களும் பிழைப்பீர்கள்! இல்லையென்றால்?" என எச்சரி.த்தது

" ஏ! மாயாவி  ! உனக்கு என்ன தான் வேண்டும்? என் உயிரை வேண்டுமானால் எடுத்துக்கொள். மக்களை விட்டுவிடு."
மாயக்கை இரத்தினசிம்மரின் முன் வந்து நின்றது, பின்

"கவலையும்  துன்பமும் என்னவென்றே தெரியாமல் இங்கே மக்கள் வாழ்வதற்கு
உன் நல்லாட்சி மட்டும் அல்லது வேறொரு  முக்கிய காரணமும் உள்ளது !
இரத்தினசிம்மர் கலவரமடைந்தார். " நீ ! நீ! எதை சொல்கிறாய்?!

"புரியாதது போல் நடிக்கிறாயே! நீயும் உன் முன்னோர்களும் ரகசியமாய் காத்துவரும் அந்த மந்திரப்பாவை! அது தான் எனக்கு வேண்டும்!"

"மந்திர பாவையா! அது என் முன்னோருக்கு இந்திரனால் கொடுக்க பட்டது!
அது தீயோர் கையில் சிக்கினால் பெரும் ஆபத்து. முடியாது! முடியவே முடியாது! என் உயிரை கொடுப்பேனே தவிர அதை உனக்கு தரமாட்டேன்!"

மறுவினாடி கண்ணைபறிக்கும் ஒளி அங்கே தோன்றியது! அதனுள் பிரம்மாண்டமான ஒரு பயங்கர உருவம் நின்று கொண்டிருந்தது! இது வரை
மாயமாய் பேசிவந்த உருவம் அது தான்!

தொடரும்..


No comments:

Post a Comment