Friday, April 19, 2013

நான் எழுதிய காமிக்ஸ் !

ஒரு  சிறிய  இடைவேளைக்கு பிறகு  மீண்டும்  சந்திக்கிறோம் !   வேலை சுமையின்  காரணமாக  எழுத  இயலாமல்  போனது .  நேரம்  கிடைத்து  எழுதலாம்  என்றால்  எதை  எழுதுவது  என்று  மறந்து  போனது . ஒரு வழியாக  யோசித்து  எழுதுகிறேன் .  இதில்  சுய  விளம்பரம்  கண்டால்  தயை  கூர்ந்து  மன்னிக்கவும் .   
 காமிக்ஸ்  படிக்கும்  எல்லோருக்கும்  ஒரு கனவு  இருக்கும்!  அது  நாம்  எழுதிய  காமிக்ஸ்  அல்லது  வரைந்த  காமிக்ஸ்  வெளிவர வேண்டும்  என்பதே  அது!  சிறியதோ  அல்லது  பெரியதோ  வெளிவந்தால்  போதும் .  அப்படி  நான்  எழுதிய  ஒரு சிறு காமிக்ஸ் ஸ்ட்ரிப்  வெளிவந்ததை  தான்  இதில்  சொல்ல விரும்புகிறேன் . 10ஆம்  படிக்கும்  காலத்தில்  ஆங்கிலத்தில்  வெளிவரும்  tinkle  விரும்பி படிப்பேன்  தமிழில்  பூந்தளிர்  .  அதில்  வரும்  ஷிகாரி  சாம்பு  (வேட்டைக்கார  வேம்பு)  தந்திரி  தி  மந்திரி  கதைகள்  மிக பிடிக்கும்   அதிலும்  மந்திரி  கதைகள்  என் பிரியமானவை . மந்திரி  கதைகள்  iznogoud  கதாபாத்திரத்தின்  இந்திய  படைப்பு . அன்றைய  காலத்தில்  வாசர்களின்  கதைகளை  வெளியிட்டு   சன்மானமும்  தந்தனர் . அதன் மூலம்  நானும்  விளையாட்டாக  ஒரு கதை  எழுதி  அனுப்பினேன் . பின்னர் அதனை  மறந்தே  போனேன் . சுமார்  இரண்டு   வருடங்கள் கழிந்து  திரு  ஆனந்த பை   அவர்களிடமிருந்து  ஒரு  கடிதம்  வந்தது  உங்கள்  கதை  ஏற்று கொள்ளப்பட்டது . சில  காலம்  பொறுத்தால்  அது  அச்சில்  வெளிவரும்  என்றும்  அதற்க்கு  200 ரூ  சன்மானம்  உண்டு  என்று  இருந்தது .  ஒரே  ஆனந்தம்  தான் .  எல்லோரிடமும்  பெருமை  அடித்து  கொண்டேன் .   சொன்னபடியே tinkle  இதழ்  413
என் கதை  வெளிவந்தது .  8 பக்கங்களை  எழுதி  அனுப்பி இருந்தேன்   ஆனால்  4
பக்கங்கள்  மட்டுமே  இருந்தது . எடிட்டிங்  போல  வந்ததே  பெரிய  விஷயம்  என்று  அமைதி  அடைந்தேன் . நண்பர்களிடம்  ஒரு  பந்தா . அந்த  வயதில்  ஏதோ  சாதித்து  விட்டதாக  ஒரு  எண்ணம் . தொடர்ந்து  எழுத  முடியாமல்  காலச்சூழலில்  சிக்கி  கொண்டேன் .  அனால்  விதி  அதே  நிறுவனத்தில்  என்னை  வேலைக்கு  சேர்த்து  விட்டது ! இதை  எண்ணி  இன்னமும்  வியந்து  போகிறேன் !   ஓவர்  விளம்பரம்  ஆகிவிட்டது  இத்துடன்  நிறுத்தி  கொண்டு  கதையினை  கீழே  தருகிறேன் .



நண்பர்கள் யாருக்காவது  இது போன்ற  அனுபவம்  இருந்தால்  எழுதுங்களேன் !

4 comments:

  1. ஸோ, S T தணிகை செல்வன் தான் நம்ம அல்டிமேட்டரா?

    கதை நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.

    உங்களது ஸ்கான்'கள் மிகவும் Raw ஆக இருந்ததால் அவற்றை போட்டோஷாப் துணையுடன் சிறிது திருத்தம் செய்து உங்களது ஜி மெயில் ஐடிக்கு அனுப்பி வைத்துள்ளேன்.

    முடிந்தால் அந்த படங்களை அப்லோட் செய்துக்கொள்ளவும்.

    ReplyDelete
  2. அவசரமான ஸ்கேன் அது! மிக்க நன்றி விஸ்வா ! நேரம் இருந்தால் பொறுமையாக டச் அப்
    செய்திருப்பேன் .

    ReplyDelete
  3. வாழ்த்துகள் நண்பரே .நானும் படம் வரைந்து ,கதை எழுதி பள்ளி நண்பர்களை படிக்க வைத்தது நோட் புக்கில் மட்டுமே .பழைய நினைவுகளை கிளறி விட்டீர் .நன்றி
    தொடர்ந்து பதிவிடவும் .

    ReplyDelete
  4. நன்றி நண்பரே! கதைகளையும் படங்களையும் சேகரித்து வையுங்கள்
    என்றாவது அது பயன்படக்கூடும் .

    ReplyDelete