Thursday, February 14, 2013

தேவை ஒரு போட்டி

காமிக்ஸ்  ரசிகர்களுக்கு  அன்பான  வணக்கம் !
 என் முதல் பதிவினை படித்த,( முடிந்தால்) ரசித்த கருத்துக்கள்  சொன்ன அனைவருக்கும் என்  மனமார்ந்த  நன்றிகள்.
 இன்றைய  பதிவில்  என்  மனதில்  கொஞ்ச காலமாகாவே  தோன்றிய  என்னத்தை  உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் .  
தமிழ் காமிக்ஸ்  உலகை  ஆட்சி  செய்த  இரண்டு  துருவங்களை ப்  பற்றிதான் 
சற்று  அசை  போட   எண்ணுகிறேன் !    அவை  முத்து &lion   மற்றும்  ராணி காமிக்ஸ் !  ( மற்ற  தமிழ் காமிக்ஸ்  பற்றி  பின்  ஒரு பதிவில் காணலாம்)
இந்த   இரண்டு துருவங்களில்  முத்து ,lion  மறு அவதாரம்  எடுத்து  கலக்கி வருகிறது !  ராணி  காமிக்ஸ்  நின்று  போனது  அனைவரும் அறிந்த ஒன்று .  
இரண்டு  காமிக்ஸ் களுமே  ஒரே காலகட்டத்தில் வெளி வந்து  நம்மை சந்தோஷத்தில் திணறடித்தது!   காமிக்ஸ் ரசிகர்கள்  லயனை  ரசித்த அதே வேளையில்  ராணியையும்  ரசித்தார்கள் என்பதை யாராலும்  மறுக்க முடியாது ! ராணி காமிக்ஸ்  வெளிவந்து  கொண்டிருந்த கால கட்டத்தில்  லயன் காமிக்ஸ்  மற்றும் முத்து காமிக்ஸ்  போட்டி  போட்டு  கொண்டு  பல 
அறிய   பொக்கிஷமான  கதைகளை  நமக்கு  தந்தது!  (குறிப்பாக  1984 டு 200)  2005ல்  ராணி நின்று போக  லயன்  காமிக்ஸ் கதைகளிலும் சற்று  சோர்வு தெரிந்தது !  தனிகாட்டு ராஜாவான்  லயன் 
தனது  கதைகளில் அவ்வளவாக  கவனம் செலுத்த  வில்லை ! ஆனாலும் நாம் அதை  பெரிதாக 
நினைக்கவில்லை  காரணம்  நமக்கு காமிக்ஸ் மேல் உள்ள  தீராத  காதல் !  ராணி  காமிக்ஸ்  பிற்காலங்களில்  லயனால்  பின்னுக்கு தள்ளப்பட்டாலும்  ராணி  ஒரு விஷயத்தில் 
முதன்மை  வகித்தது ! அது  நேரத்திற்கு  காமிக்ஸ் வெளியுடுவது !  மாதம் இருமுறை  கண்டிப்பாக கடைகளில்  வந்துவிடும்.  லயனிடத்தி ல்  அது  சற்று  மிஸ்  ஆனது  எனக்கு  வருத்தமே ! ( அது மட்டும்  இருந்தால்  இந்நேரம்  முத்து  700 இதழ்களை  கடந்திருக்கும் )  
இன்றைக்கு  லயனின்  புதிய அவதாரம்  நம்மிடையே  ஒரு வித குதூகலத்தை உண்டாக்குகிறது 
எல்லாரும்  லயனின் வருகையை கொண்டாடுகிறோம்  கொண்டாடுவோம் !  nbs  போன்ற 
இமயத்தை (தற்சமயம்) நாம்  அனாவசியமாக  கடந்தது  காமிக்ஸ் மேல் குறிப்பாக  லயன் மேல் நாம் வாய்த்த தான் காரணம் என்றால் மிகை ஆகாது !   இவ்வளவு  கொண்டாட்டத்திலும்  
 ஒரு சிறு வருத்தம் தோன்றுவதை தடுக்க இயலவில்லை  அது  லயன் போட்டியே  இல்லாமல் 

இருப்பது!  வெறுமனே  லயன் மட்டும்  காமிக்ஸாய்   வருவது  காமிக்ஸ்  பசியை  தீர்க்க  போதுமானதை  இல்லை !  நான் கேட்பது  ஒன்றே !  தமிழ் காமிக்ஸ்ல்  போட்டிகள்  உருவாக வேண்டும்  அதன் மூலம் நிறைய   தரமான  காமிக்ஸ்கள்  வெளிவந்து   நம் காமிக்ஸ் வேட்கையை  ஒரு அளவுக்காவது  தணிக்க  வேண்டும்!  யாருக்கு தெரியும்  லயனின்  மறுபிரவேசம்  தூங்கிகொண்டிருக்கும்  ராணியை எழுப்பலாம் ! அப்படி நடந்தால்  நமக்கு கொண்டாட்டம் தானே!  உங்கள்  கருத்தென்ன  நண்பர்களே? 13 comments:

 1. நிச்சயமாக .. இராணி காமிக்ஸ் மறுபடி வந்தால் கொண்டாட்டமே

  ஆரோக்கியமான போட்டிக்கு வழிவகுக்கும்... நம்மளுக்கும் நிறைய காமிக்ஸ் கிடைக்கும் :)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி இங்கே கருது சொன்னதற்கு periyar அவர்களே இன்றைய தேதியில்
   எங்குமே ராணி காமிக்ஸ் கிடைபதில்லை ரீப்ரிண்டும் இல்லை நினைத்து பாருங்கள் !

   Delete
  2. நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து at least reprints-லிருந்து ஆரம்பித்தால் கூட நல்லது. நமது காமிக்ஸ் அன்பர்கள் நிச்சயம் வரவேற்பார்கள்.

   Delete
  3. உண்மையான வார்த்தைகள்! நன்றி பெரியார்!

   Delete
 2. நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் அப்படியே ராணி காமிக்ஸ் மறுபிரவேசம் எடுத்தாலும், அது பழைய பாணியில் இருந்தால் கண்டிப்பாக எடுபடாது. காலத்துக்கு ஏற்றாற்போல் மாறியுள்ள லயன், முத்து காமிக்ஸ் போல் வந்தால் கண்டிப்பாக முழு போட்டியை ஏற்ப்படுத்தும்.

  ReplyDelete
  Replies
  1. தரத்திலும் தரமான கதைகளிலும் லயன் முந்துகிறது என்பது உண்மை! ஆனால் ராணி
   சுலபமாக கிடைக்கும் புத்தகமாக இருந்து விட்டால்? சற்றே விலை குறைவாய் ? ராணி காமிக்ஸ் தினத்தந்தி பின்புலமாக உள்ளது ! அவர்கள் மார்க்கெட்டிங் செய்து விடுவார்கள் .
   லயன் காமிக்ஸ் தமிழ் காமிக்ஸ் உலகின் ராஜா என்பது சந்தேகத்திற்கு இடமில்லாத ஒன்று ஆனால் அவர்கள் ஓபன் மார்க்கெட்டிங் செய்ய வேண்டும்.

   Delete
 3. வணக்கம் ஜி! வந்தால் மாரி போலப் பொழிவார்கள்! போனால் மாரி போன்றே ஏங்க வைக்கின்றனர் ராணி, மேத்தா, பொன்னி, பூந்தளிர் கிளாஸிக் வரிசை என!! தங்கள் ஏக்கமே எங்களது ஏக்கமும் கூட! வராங்காட்டி ஸ்கான் போட்டுடுவோம் என்று போட்டுக்காட்டியும் வராது யோசித்தவண்ணம் உள்ளனர்! என்னதான் பண்றது!

  ReplyDelete
  Replies
  1. புத்தக திருவிழா நடத்துவது போல், தமிழ்நாட்டில் காமிக்ஸ் திருவிழா (comic con ) நடத்த வேண்டும் . அட்லீஸ்ட் நமக்கு தெரிந்த சோசியல் நெட்வொர்க்கிலாவது இதைப் பற்றி நெறைய எழுத வேண்டும் ! நம் போன்ற வாசர்கள் இருபதால் தானே லயன் மீண்டு வந்தது அது மாதிரி தொடர்ந்து ஆதரவு தெரிவித்தால் கண்டிப்பாக இவையும் வரும் காத்திருப்போம் !

   Delete
  2. சென்னையில் காமிக் காண் கொண்டுவர அணைத்து ரசிகர்களின் ஆதரவும் வேண்டும்!! காமிக் காண் டீம் சென்னைக்கு வர தயாராக உள்ளனர் அவர்களை co-ordinate பண்ண நானாச்சு!!

   ராணி காமிக்ஸ் மீண்டும் மறுபதிப்பு போட்டாலும் வாங்கும் மக்கள் அதிகம் உள்ளனர் !!
   அதனை விட இப்போது அமெரிக்கன் லைப்ரரி அப் காமிக்ஸ் போல பெரிய டிகேச்ட்கலாக போட்டால் ரசிகர்கள் மிகவும் ரசித்து வாங்குவர்.

   Delete
  3. சென்னைக்கு காமிக் கான் வந்தால் அதை விட ஒரு சந்தோஷ மான நிகழ்வு இருக்க முடியாது! ரசிகர்களிடம் இது குறித்து கருத்துகளை தெரிவியுங்கள்!
   இதை உங்களால் செய்யமுடியும் என்றால் உங்களுக்கு காமிக்ஸ் ரசிகர்கள் சார்பில் கோடானுகோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்! ஆங்கிலத்தில் காமிக்ஸ் வெளியிட்டு வரும் நம் நாடு நிறுவனங்கள் தமிழிலும் வெளியிட செய்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்! ராணி காமிக்ஸ் எந்தவடிவிலவது வந்தால் சரி! டைஜஸ்ட் முறையில் வந்தால் சிறப்பு !

   Delete
 4. போட்டி இருந்தால் நன்றாக இருக்கும்தான்! ஆனால், தரம் மிக முக்கியம்! ராணி காமிக்ஸால் அதைத் தர முடியுமா என்பது கேள்விக்குறியே! குழந்தைகள் புத்தகம்தானே என்று அவர்கள் காட்டிய உலக மகா அலட்சியத்தை நம் காமிக்ஸ் வாசகர்கள் எளிதில் மறக்க மாட்டார்கள்!

  ReplyDelete
  Replies
  1. இந்த தளத்தில் சேர்ந்தமைக்கு நன்றி நண்பரே! ஒரு நல்ல எடிட்டர் வரும் பட்சத்தில்
   ராணி மறுமலர்ச்சி அடைய வாய்ப்புள்ளது ! மார்க்கெட்டிங் அவர்கள் பெரிய பலம்!
   ஒரே ஒரு 5 ஸ்டார் மட்டும் போதுமா? பக்கத்தில் ஒரு உடுப்பி ஹோட்டல் இருந்தால்
   நல்ல இருக்குமே! இருவரும் தங்கள் முறையில் வசதிகளை பெருக்குவார்கள் நமக்கு நமக்கு லாபம் தான் ! தனியாக ஓடுவதில் என்ன சுவாரஸ்யம் போட்டியில் ஜெயித்தால்
   தானே சந்தோஷம் !

   Delete