Tuesday, February 19, 2013

முதலும் முதலும் -பகுதி-1

காமிக்ஸ்  உலகில்  எண்ணற்ற வகைகள்  இருந்தாலும்  யாருக்குமே  சலிப்பை  ஏற்படுத்தாத  சொல்ல போனால்  காமிக்ஸ்  பாணியின் தாய் போல  இருப்பது
துப்பறியும் பாணி கதைகளே!   அத்துப்பறியும்  கதைகள்  அன்று முதல் இன்று வரை  எல்லோராலும்   படிக்கபடுகிறது!   அன்றைய  ஷெர்லோக் ஹோம்ஸ்
முதல் இன்றைய  ராஜேஷ்குமார் விவேக் வரை  அனைவரும்  வாசகர்களின் favourite !  இந்த துப்பறியும் கதைகளை முதன் முதலில்  எழுதியது  யார் என்று
பார்க்கலாம் ! இதில்  ஒரு சுவாரஸ்யம்  உண்டு!   முதல் துப்பறியும்  கதை எழுதியவர்  எட்கர் அலன் போ!   முதல் நாவல் எழுதியவர்  சார்லஸ் பெலிக்ஸ் என்பவர்!   இதென்ன குழப்பம்  என்கிறீர்களா?  விடை  கீழே !
 1841 ஆம்  ஆண்டு   எட்கர் ஆலன் போ என்கிற  பிரபல நாவலாசிரியர்  எழுதிய  தி மர்தேர்ஸ்  ஆப்  தி ரூ  மோர்க்   என்ற கதையே முதன் முதலில்  எழுதப்பட்ட துப்பறியும் கதை ஆகும் !  கதாசிரியர்   டுப்பின்  என்கிற கதாப்பாத்திரத்தை
மயமாக கொண்டு  இக்கதையினை  அமைத்துள்ளார்!
ரூ மோர்க் என்கிற  ஒரு பாரிஸ்  நகர தெருவில்  நான்காவது மாடியில்   இரட்டை கொலை நடக்கிறது !  L'Espanaye மற்றும்  அவரது  மகள்  கொடூரமான  முறையில்  கழுத்தருப்பட்டு   கொலை  செய்ய படுகின்றனர் ! மகளின் உடலை  கொலைகாரன்  ஒரு  புகை போக்கியில்  அடைக்க முயன்று  ஓடிபோய் இருந்தான் !  தலை ஏறத்தாழ  அறுந்து போ ய் இருந்தது !   வெளி உலக தொடர்பை  துண்டிதிருந்த அப்பெண்கள்  இரவில்  மட்டுமே  வருவதை  வழக்கமாக  கொண்டிருந்தனர் !   இச்செய்தியை   நாளிதழில்  படித்த  auguste  dupin  என்பவரது  நண்பர்  அவரிடம் கூறுகிறார் .
 auguste  dupin   மிகவும்  உந்தப்படவராய்  இதில்   ஈடுப்பட்டார் !   அவரே வழிய சென்று  இக்கொலை வழக்கில்  உண்மை குற்றவாளியை  கண்டுபிடிப்பதாக கூறினார் !   இதற்கிடையே  அடோல்ப்  லே  பான்  என்பவரை காவல்துறை  கைது செய்தது!   டுப்பின்  விசாரணையை தொடங்கினார்  அதில்  ஒரு  முக்கியமான  தகவல் ஒன்றை கண்டுபிடித்தார்! அது  கொலைகாரன்  எந்த  மொழியிலும் பேசவில்லை  ஒரு வித சப்தம் மட்டுமே போட்டதாக  அறிந்தார்!
 மேலும்  அவர் தடயங்களை  சேகரித்த பொழுது  ஒரு தலை முடியினை  கண்டறிந்தார் !  அது தான் இந்த கொலைச்சம்பவதை  துப்பு துலக்குவதற்கு   ஆணிவேராய்  அமைந்தது!  அது  ஒரு மனிதனின்  முடியே  அல்ல என்றும்  அது  ஒரு மிருகத்தின் முடி என்றும்  தெளிவு படுத்தினார்! பின்னர் அவர்  தினசரி ஒன்றில்  விளம்பரம்  ஒன்றை  கொடுத்தார் .  அதில்  சமீபத்தில்  யாரவது  ஓரங் ஒட்டன்  குரங்கினை  தொலைத்திருந்தால் தெரிய படுத்த வேண்டும் எனவும்  அது சம்பந்தமாய்  தன்னை சந்தித்து பேச வேண்டும் எனவும் கேட்டு  இருந்தார்!  ஒரு சில நாட்களில்  அதற்க்கு நல்ல  பலன்  கிடைத்தது !  ஒரு மாலுமி  அவரை  நேரில் சந்தித்து ,  தான் வளர்த்து  வந்த  ஒரு ஓரங்  உடான்  கொரங்கு ஒன்று  தன்னிடமிருந்து  தப்பிசென்ர்டு விட்ட தாகவும் , ஆடை தன்னிடம் ஒப்படைத்தால்  தக்க சன்மானம்  தருவதாகவும்  சொன்னான்!  டுப்பின் அவனிடம்  முழுவிவரத்தையும் சொன்னால் தான்  தன்னால்  ஏதும்  செய்ய முடியும்  என்று கூறினார்!
 மாலுமி தான் கப்பலில் சவரம் செய்யும் தொழில் செய்வதாகவும்  ஒரு நாள் அந்த குரங்கு  தன்னுடைய  சவரம் செய்யும்  கத்தியுடன்  தப்பி விட்டதாகவும் 
கூறினான்!  டுப்பின்  நடந்த கொலைகளை பற்றி  விவரம் கேட்டார் ! அவன்  அந்த  குரங்கை பிடிக்க முயற்சிக்கும் பொழுது  அது கம்பத்தில்  ஏறி சென்று 
ரே மோர்க் தெருவில் உள்ள வீட்டில்  ஜன்னல் வழியாக நுழைந்ததாகவும் 
அங்கே இரு பெண்கள் இருக்க  அதில் ஒரு பெண்ணிற்கு (தாய்)  சவரம்  செய்முயன்றதாகவும் அதில் அந்த  பெண் கழுதருப்பட்டு  இறந்ததாகவும் 
இரத்தத்தை  பார்த்த குரங்கு  வெறி பிடித்து  அந்த பெண்ணின் மகளை  கழுத்து அறுத்து  கொன்றது!  பின்னர்  பயந்த  குரங்கு  பெண்ணின்   உடலை  ஒரு  புகைபோக்கியில்  நுழைக்க முயன்று ஓடிப்போனது! இவற்றை எல்லாம் கண்ட மாலுமி  அந்த குரங்கை  தப்பிக்க வைத்ததாகவும் கூறினான்! மேலும் தான்  தினமும்  சவரன் செய்வதை பார்த்துத் தான்  அது இவ்வாறு நடந்து கொண்டது என்றும்  கூறினான்! டுப்பின்  இதனை  சட்ட காவலர்களிடம்  கூறிய பொழுது  அவர்கள் நம்பாமல்  அவரை  வேலைபார்த்து கொண்டு போகும் படி கூறினர் ! இதுவே இந்த கதையின் முடிவாகும்!   இந்த கதை  ஏப்ரல்  1841 ஆம்  ஆண்டு  க்ரஹாம்   magazine  என்ற பத்திரிக்கையில்  வெளிவந்தது. முதல் துப்பறியும்  கதை என்கிற பெருமை  கொண்டாலும்  இது  அளவில்  சிறியதாய்  இருப்பதால்  இதனை  சிறுகதை வரிசையிலேயே  சேர்க்கின்றனர். .அதனால்  இது  நாவல் அந்தஸ்தை இழக்கிறது .
1862ஆம் ஆண்டு  சார்லஸ்  பெலிக்ஸ்  என்கிற புனைப்பெயரில்  ஒருவர் எழுதிய  கதையே  முதல் துப்பறியும் நாவலாக  ஏற்றுக்கொள்ளப்படுகிறது ! அவருடைய  உண்மையான  பெயர் என்ன என்பதும் அவர் யார் என்பதும் 140
வருடங்களாக மர்மமாய் இருந்தது!   சமீபமாய்த்தான்  அவரை பற்றிய  உண்மைகள்  தெரிய வந்தது !  அதனை ப்  பற்றியும்,  கதையினைப்பற்றியும்  நாம்   அடுத்த  பகுதியில் காண்போம்! 



(எட்கர்  ஆலன்  போ எழுதிய  கதையின்  எழுத்து வடிவம்!)
(source  விக்கிபீடியா)

2 comments:

  1. நல்ல பதிவு.
    நீங்கள் கூறிய எழுத்தாளர் பற்றி சமீபத்தில் வந்த படம் RAVEN.
    ஆனால் படம் எதிர்பார்த்த அளவு இல்லை.

    முடிந்தால் Word Verification நீக்கவும்.

    ReplyDelete