Wednesday, February 20, 2013

முதலும் முதலும் பகுதி-2 (நோட்டிங் ஹில் மர்மம்)

நண்பர்களே சென்ற பகுதியில் நாம்  முதல்  துப்பறியும் கதையை பார்த்தோம்  இதில்  முதல்  துப்பறியும் நாவலை பார்ப்போம் .  1862ஆம்  ஆண்டு  சார்லஸ் பெலிக்ஸ்  என்கிற புனை பெயருடன் ஒருவர் எழுதிய கதையே  முதன் முதலில் எழுதப்பட்ட  துப்பறியும் நாவல்  ஆகும் !
இந்த சார்லஸ் பெலிக்ஸ் என்பவர்! இவர்  யார்? என்று பல காலம் மர்மமாகவே  இருந்து  வந்தது,  கிட்ட தட்ட 140 வருடங்கள்.  இதனை கண்டுபிடிக்கவே பலரும் பலவாறு  முயன்று  கடைசியில்  ஒரு  முடிவுக்கு  வந்தனர்!  அது  சார்லஸ்  வாரென்  ஆடம்ஸ்  என்கிற கனவான்  தான்  இப்படி ஒரு புனைப்பெயரில்  எழுதுவதாக  அறிவித்தனர். வேறு கூற்று  எதுவும் ஒத்து வராததால்  இதையே  ஒப்புகொள்ள வேண்டியதாய் போயிற்று .
     இவர்  தொழில் முறையில்  ஒரு வக்கீல்  ஆவார்!  மேலும் சில நாவல்களையும் எழுதி உள்ளார் .   இந்த கதை நாவலாய்  வடிவம் பெறுவதற்கு முன்னர்  once  a   week என்கிற பத்திரிக்கையில்  தொடரை வெளிவந்தது!
அதனை  வெளியிட்டவருக்கே  அதனை எழுதியவரை  தெரியாமல் இருந்ததாம்!   இனி  கதைக்குள்!   பாரோன் என்கிற கனாவனின் மனைவி ஆ சிட் குடித்து  இறந்து போகிறாள் . அவளுக்கு தூக்கத்தில் நடுக்கும் வியாதி  இருப்பதால்  அதன் மூலம் இந்த முடிவை தேடிக்கொண்டதாக  முடிவு செய்கின்றனர் .  அனால் இன்சூரன்ஸ்  ஏஜென்சி  சார்பாக  வரும் துப்பறிவாளர்
ரால்ப்  ஆண்டெர்சன்  இதை நம்பவில்லை காரணம் பரோன்  தன மனைவி இறப்பதற்கு  சமீபமாய்  5  ஆயுள்  காப்பீடு திட்டங்களை  வாங்கிவைத்திருந்தார்! ஆண்டெர்சன்  புலன் விசரானையை ஆரம்பிக்க
மெல்ல மெல்ல மர்மம் வெளி வருகிறது!  அதில் ஒன்றல்ல  மூன்று  கொலைகாரர்கள்  பற்றி  தெரிய வருகிறது!  இதில்  உண்மை  குற்றவாளியை  அவர்  எப்படி கண்டு பிடிக்கிறார்?,  பரோனை அவரால் பிடிக்க  முடிந்ததா?  என்பதே  கதையின் உச்சகட்டம்!  ஒரு மர்ம நாவல்  தொடர்கதையாய் வெளிவந்து  ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைத்தது,  இந்த கதையின் மூலம் தான் ஆரம்ப மானது!  புதிருக்கு பழக்க படாத  வாசகர்கள்   தலை முடியினை  பிய்த்துகொண்டனர்!    சார்லஸ் பெலிக்ஸ் அவர்கள்   தன்னுடைய  நாவலில்
பல  புதுமையான முறைகளை  கையாண்டுள்ளார் .  அதுவே  துப்பறியும்  நாவல்கள் எழுதுவோருக்கு   முன்னோடியாக  விளங்குகிறது!  ஷெர்லோக் ஹோம்ச்க்கும்  முன்னால் !   அவரது  புலன் விசாரணை  பாணி  அக்காலத்தில்எவருமே  உபயோகம்  செய்யாதது!  மிகவும் முற்ப்போக்கானது !
கிட்டத்தட்ட  150 வருடங்கள்கழித்து  2012 ஆம்  வருடம் தான்  அதன் ரீப்ரின்ட்
வெளியிட்டனர்! 

No comments:

Post a Comment