Friday, March 1, 2013

நரகுல நாயகன் !

      வணக்கம் நண்பர்களே !   ஒரு  சிறிய  இடைவெளிக்கு  பின்  இந்த பதிவு !
 சிறுவயதில்  நாமெல்லாம்  பள்ளியிலும் சரி  விடுமுறையிலும்  சரி , நாம் விரும்பி  படித்திடுவது  தேவதை  கதைகள்  எனப்படும்  fairy  tales!   எத்தனையோ கதைகள்  இருந்தாலும்  அதில்  ஒன்றிரண்டு  தான்  நம் மனதில் நிலைத்திருக்கும் !    அப்படி ஒரு கதை தான்  ஜாக்  அண்ட்  தி  பீன்  ஸ்டாக் "
அந்த கதையினை  சற்றே போலிஷ் செய்து  ஜாக் தி  ஜயண்ட்  slayer  என்று  திரைப்படமாகி உள்ளனர் .   தமிழில்  நரகுல  நாயகன் என்ற பெயரில்  வெளியாகி உள்ளது !  ஏற்கனவே தெரிந்த கதை என்றாலும் அதை  புது கதை போல் படமாகி  இருப்பது புதுமை !  அதிலும்  அந்த அரக்கர்கள் கோட்டை  வாவ்  ராகம் !  பூமிக்கும்  சொர்கத்துக்கும் இடையே  அரக்கர்களின்  உலகமிருப்பதாக  மக்கள் நம்புகின்றனர் , அங்கு இருக்கும் புனித துறவிகளிடம்  சில மந்திர விதை கிடைக்கிறது!  அதன் மூலம் பூமிக்கும் சொர்கத்துக்கும் ஒரு பாலம் அமையும் என நம்புகின்றனர் !  ஆனால்  அது அரக்கர் உலகத்திற்கு இட்டு  செல்கிறது  அரக்க்கர்கள்   பூமிக்கு  வர நாசம் விளைகிறது !   இதனை    கண்ட  அரசர்  எரிக்  அந்த மந்திர  விதைகள்  சிலதை  கொண்டு  ஒரு கிரீடம்  தயார்  செய்கிறார்  இந்த கிரீடம்  யாரிடம்  இருக்கிறதோ  அவருக்கு  அந்த அரக்கர் கூட்டம்   மொத்தமும்  அடிமை !   அரசர் அந்த
கிரீடத்தை  பத்திரமாக  பாதுகாத்து வருகிறார்!  காலம்  ஓடுகிறது , ஜாக்  எனும்  சிறுவன்  வளர்ந்து இளைஞன்  ஆகிறான்   சிறுவயதில்  அவன் படித்த  அந்த அரக்கர்  கதையினை  அவன் நம்புகிறான்   ஒரு  நாள்  அவன்  தன குதிரையை  விற்க முயற்சிக்கும்  பொது   துறவி ஒருவர்  அவனிடம்  சில  பீன்ஸ் விதிகளை தந்து குதிரையினை  வாங்கி செல்கிறார் !  அந்த  விதை களை  கொண்டு  உலகையே மாற்றலாம்  என்கிறார்!   ஜாக் அதை  நம்புகிறான்   அந்த விதிகளின் மீது  தண்ணீர்  மட்டும் பட கூடாது  என்கிற  எச்சரிக்கையை  மறக்க இரவு  நேரம்  மழை பெய்கிறது !  தனக்கு பிடிக்காத  கல்யாணத்திற்காக  அரண்மனை  விட்டு  ஓடி வந்த இளவரசி  அவன்  வீடு வாசலில்  நிற்கிறாள் !
ஜாக்  அவளை  உள்ளே  அனுமதிக்கிறான் ,  அந்த நேரம்  ஜாக் வசம்  இருந்த  பீன்ஸ் விதைகளில் ஒன்று   கீழே தண்ணீரில்  விழ  விளைவு  அவன்  கனவில்  மட்டுமே கண்ட காட்சி  அங்கே அரங்கேறுகிறது!   இதற்க்கு  மேல் விவரித்தால்  சுவாரசியம்  குறைந்து விடும் என்பதால்  இத்துடன்  நிறுத்தி  கொள்கிறேன்!  மிகவும்  ஜனரஞ்சகமாய்  படத்தை  இயக்கி உள்ளார்  பரயன் சிங்கர்!  (எக்ஸ்  மென் )   படத்தில் எந்த  இடத்திலும் தொய்வு  இல்லை!  ஆரம்பம்  முதல் விறுவிறுப்பு!  பிரமாண்ட மான  அந்த  கொடிகள்!   பூதங்களின்  உலகம் , அவர்களின் அட்டகாசம்  என  பல ரசிக்கும்  காட்சிகள்  உள்ளன !
 குழந்தைகளுடன்  காண வேண்டிய   ஒரு
சிறந்த  பொழுது போக்கு  திரைப்படம்!

5 comments:

 1. நல்லதொரு பதிவு! வாழ்த்துக்கள் ஜி!

  ReplyDelete
 2. மொதலா வந்து கமண்ட் பண்ணிடீங்க ! சூப்பர் சோனிக் பாஸ்ட் ஜி நீங்க !

  ReplyDelete
 3. நன்றி நண்பரே.. படம் பார்த்துவிட்டு வருகின்றேன்...

  ReplyDelete
 4. நேத்து பாத்திருக்க வேண்டியது முடியவில்லை.
  அடுத்த வாரம் பார்க்கவேண்டும்.

  Please remove word verification.

  ReplyDelete
 5. ultimator update and post more articles regularly , unga kitta unnum unnum niraya ethirparkirom...

  ReplyDelete