Thursday, February 14, 2013

ஒரு கருப்பு வீரனின் போராட்டம் !

django (ஜாங்கோ  அப்படித்தான்  உச்சரிக்கவேண்டும் )  unchained      என்ற  திரைப்படம்  கில் பில்  புகழ்  quentin  tarantino  இயக்கிய  ஒரு  புதிய ஆக்க்ஷன் 
படைப்பு!  இந்த  படம் ஒரு கௌபாய்  திரைப்படம் என்பதால்  இதனை 
இங்கே  பகிர்ந்து கொள்கிறேன் ! 
 ஜாங்கோ  திரைப்படம் ஏற்கனவே  1960களில்  வெளிவந்த  ஒரு வெற்றி கரமான  திரைப்படம் ! அதில்  கதாநாயகன்  வில்லன் கும்பலிடம் சிக்கி  தன் 
விரல்களை  இழப்பான்  பின்னர்  கல்லறையில்  இருக்கும் சிலுவையில் triggerai 
சொருகி  சண்டைபோடுவான் !  அதே கதாபாத்திரம்  ஆனால் வேறுவிதமாக  ரேபூட்  செய்யப்பட்டு  உள்ளது !  கறுப்பின  அடிமைத்தனத்தை  பற்றி சமீபத்தில்  வந்த  திரைப்படம் இதுவாகத்தான்  இருக்கும் என்பது  என் எண்ணம்!   இனி  கதைக்குள் !
கதையின் காலம்  அமெரிக்க  சிவில்  போர்  தொடங்குவதற்கு  முன்  ஆரம்பிக்கிறது !  ஜாங்கோ ஒரு கறுப்பின அடிமையாக இருக்கிறான் ! 
அவனை  dr jhon scultz  என்பவர்  அந்த  அடிமை தளத்தை  நீக்குகிறார் . பதிலுக்கு 
தேடப்படும்  கொலைகாரர்களை  கொல்வதற்கு  இவனை  பயன்படுத்துகிறார் !
அவனும் சம்மதிக்கிறான்  ஒரு  நிபந்தனை  பேரில் .  அது  அடிமையாய் சிக்கி 
தவிக்கும்  தன்  மனைவியை  மீட்கவேண்டும்  என்று !  அவரும் ஒப்பு கொள்கிறார் .  இருவரும் பயணத்தை  தொடர்கின்றனர் ,  வழியில்  அவர்கள்  பல்வேறு  குற்றவாளிகளை  கொன்று  பரிசுபணத்தை  சேமிகின்றனர் . சாங்கோ  மனம் முழுக்க  அவன் மனைவி இடமே  இருக்கிறது .  வழியில் கிடைத்த  தகவலின் பேரில்  அவர்களுக்கு  கால்வின் காண்டி (லியானர்டோ  டிகாப்ரியோ- titanic  நடித்தாரே  அவரே தான் )  பற்றி  தெரிய வருகிறது ! அவர் ஒரு பெரிய  பண்ணை நடத்தி வருவதாகவும்  அதில் நிறைய  கறுப்பின அடிமைகள் வேலை செய்வதாகவும் தெரிகிறது  இருவரும்  இருவரும் அவரை சந்திக்க முடிவு செய்கின்றனர் . நீண்ட பயணத்தின் முடிவில்  அவர்கள்  கால்வின் காண்டின்  பண்ணையை  அடைகின்றனர் ! அங்கே  நிறைய கறுப்பினத்தவர்கள் வேலைசெய்வதை பார்க்கின்றனர்  ஜாங்கோ  தன மனைவியை தேடுகின்றான் ! ஆனால் அவளை  காணவில்லை  இந்நிலையில்  அவர்களை பண்ணையின்  உரிமையாளர்  கால்வின்  காண்டி 
சந்திக்கிறார்  அவரிடம்  dr  schultz  தான்  ஒரு பண்ணையை நடத்திவருவதாகவும் அதற்கு சில அடிமை பெண்களை விலைக்கு  வாங்க வந்திருப்பதாகவும்  கூறுகிறார்!  காந்தியும் சில அடிமைகளி காட்டுகிறார் 
அவர்களில்  ஆங்கோ மனைவியும் ஒருத்தி ! schultz  ஜாங்கொவின்  மனைவியை தேர்வு செய்கிறார்  தனியாக  அவளை வரச்செய்து  அவளிடம் 
 அவளை மீட்க  அவளது கணவன் வந்திருப்பதாகவும்  கொஞ்சம்  பொறுமை காத்தால்  அவளை  மீட்க  முடியும் என்றும் கூறுகிறார்  அவளும்   சம்மதிக்கிறாள்!  இதற்கிடையில்  காண்டியின்   விசுவாச வேலைக்காரன் ஸ்டீபன் (சாமுவேல் ஜாக்சன்) சந்தேகம் கொள்கிறான்  அதனை காண்டிஇடம் 
கூற  காண்டி  இருவரையும் விசாரிக்கிறார்  வாக்குவாதம்  ஆரம்பிக்க  முடிவில் 
12000 டாலர்கள்  கொடுத்தால் அவளை விடுவதாக  காண்டி  கூற  வேறு வழி இல்லாமல்  schultz  சேமித்த பணத்தை தருகிறார் !  விடுதலைபத்திரம்  கையெழுத்தாகும் பொழுது  காண்டி தன சுய ரூபத்தை காட்ட  போராட்டம் வெடிக்கிறது ! அதில் காண்ட்யும்  schultz ம்  இறக்கின்றனர் ! ஜான்கோவும்  அவன்  மனைவியும்  காண்டின்  நண்பர்களிடம்  சிக்கிகொள்கின்றனர் .  சாங்கோ  தன்  சாகசத்தால்   அங்கிருந்து தப்பித்து  கயவர்களிடம்  போராடி  அவர்களை  கொன்று  தன்  மனைவியை  மீட்கிறான் ! (சண்டை காட்சிகள்  அட்டகாசமாய் இருக்கும்)
படத்தின் பலமே  காட்சிகள் தான்  துப்பாக்கி வெடிக்கும் ஓசையும்  அதனை தொடர்ந்து  இரத்தம் தெறிக்கும் காட்சியும்  வாவ்  சொல்ல வைக்கும் .
ஜான்கோவாக  சமி  பாக்ஸ்  நடித்துள்ளார்  திர schultz ஆக  christoperwaltz  நடித்துள்ளார்!  இதில்  highlight  என்பது  டிகாப்ரியோ  கொடூர வில்லனாக  வருவது தான் !  அடிமைகளை  இரத்தம்  வர சண்டையிட செய்வதும் 
அவர்கள் மேல் நாயை ஏவி கொல்வதும் ,  கொடுமை !  இறுதியில்  சுபமாக முடிந்ததால்  தான்  மனம்  அமைதி  அடைகிறது ! ஆப்ரிக்க  மக்களை  அமெரிக்கர்கள்  அடிமையாய்  கொடுமை செய்வதை  தத்ரூபமாக  சிதரிகிறார் 
director  தரண்டினோ  படத்தில் கொஞ்சம் violence  ஓவர்டோஸ்  ஆக  
உள்ளதால்  கவனமாக  பார்க்கவும் !  ஆனால்  கவ்பாய்  கதைகளை  விரும்புவோருக்கு  இது அற்புத படைப்பு!  கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள் !

3 comments:

 1. நல்ல பதிவு இந்த படம் டிவிடி எங்கே கிடைக்கும். இந்தblog இல் follower ஆவது எப்படி

  ReplyDelete
  Replies
  1. அந்த படத்தின் dvd யை நான் சென்னை அண்ணாசாலை ரிட்சி ஸ்ட்ரீட்டில் வாங்கினேன்;
   உங்களுக்கு face புக் அக்கௌன்ட் இருந்தால் அதன் மூலம் follow செய்யலாம் அல்லது உங்கள் ப்ளாக் மூலம் ஒரு லிங்க் கொடுத்தால் போதும். உங்கள் ப்ளாக்ல் இருந்து my blog list ல்
   எனது ப்ளாக் இற்கு ஒரு லிங்க் கொடுத்தால் போதும். எனது ப்ளாக் அட்ரஸ்
   www.mega-ultimator.blogspot.in. உங்கள் ப்ளாக் ஐ நான் இணைத்து கொண்டேன் தொடர்ந்து
   கமெண்ட் எழுதும் பொது லிங்க் easy ஆகிவிடும்

   Delete
 2. இன்னும் பார்கவில்லை.
  டிவிடி இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
  ஆனதும் பார்க்கவேண்டும்.

  ReplyDelete