Sunday, February 17, 2013

பெலுடா (feluda) கல்லறை தோட்ட மர்மம் !

பெலுடா  கதாபாத்திரமானது  இந்திய   துப்பறியும்  நாவல்களில்  முக்கிய இடம் வகிக்கிறது !   இதை உருவாக்கியவர்  மறைந்த  பிரபல  இயக்குனரான  சத்யஜித்ரே அவர்கள் !   சிறுவர் இதழான  சந்தேஷில் 1965ஆம்  வருடம்
அவர் இந்த நாயகனை  உருவாக்கினார் . கூறிய அறிவும் எதையும் ஆராயும் தன்மை கொண்ட  இக்கதாபாத்திரம்  குறுகிய காலத்தில் பிரபலம் ஆனது !35
நாவல்களை அவர்  எழுதி உள்ளார் !  பெலுடா வின்  உண்மை பெயர்  பிரதோஷ் சந்திர மிட்டர்  ஆகும் !  தனது  சகோதரன் (தோப்ஷே) நண்பர்(ஜடாயு )
 ஆகியோருடன் சேர்ந்து  அவர் செய்யும் சாகசங்களே  கதைகளாகும் !
 இந்த கதை தொடர்  நாவல்  வடிவிலும்  காமிக்ஸ் வடிவிலும்  சிறுகதை தொகுப்பாகவும்  வெளிவந்துள்ளது !   காமிக்ஸ் வடிவில் வெளிவந்த ஒரு கதையினை தான்  நாம் பார்க்க போகிறோம் .
 கதையின் களம் : கொல்கத்தா
ஒரு நாள் காலை  பெலுடா  அன்று  வந்த தினசரியைப்பார்த்து  அதிர்ச்சி அடைகிறார் .  அதில்  புயல் மழை சூழ்ந்த இரவில்  கல்லறை தோட்டத்தில் ஒருவர் அடிபட்டு  காயம் அடைந்ததாகவும்  அவரை  மருத்துவமனையில்  சேர்த்ததாகவும்  தகவல் கிடைக்கிறது .   புயல்  மழையில்  ஒருவர் அங்கே ஏன் செல்ல வேண்டும்?  பெலுடாவிர்க்கு  சந்தேகம் வலுக்க, தன குழுவோடு அங்கே சென்று சோதிக்கிறார் !  அங்கே தாமஸ் கொட்வின் என்பவருடைய  கல்லறைஉடைக்கப்படிருந்தது !  அருகில் ஒரு பர்சும்  அதனுள் சில காகிதங்களும்  ஒரு சட்டை பட்டனும்  கிடைக்கிறது !  இரவு அடிப்பட்ட  நபரின் ' பர்சுதான் அது என்றும் அவர் பெயர் நரேன்ட்ரநாத் பிஸ்வாஸ் என்றும்,அவர் கொல்கத்தாவின் வரலாற்றை  நாழிதளில் எழுதி வருவதையும் கண்டுபிடிக்கிறார் .  பின்னர்  தனக்கு தெரிந்த  பெரியவர் அறிவு ஜீவி சிது ஜீதா  விடம் சென்று  தாமஸ் கொட்வின்  என்பவர் யார் என  விசாரிக்க  தாமஸ் கோட்வின்  19ஆம்  நூற்றாண்டில்  லக்னோ வை  ஆண்ட நவாப் ஒருவரிடம்
சமயல்காரராக  வேலைசெய்தவர்  என்றும்  அவரிடம் நவாப்  மிகுந்த பாசத்தோடு பழகியதாகவும்
நெறைய அன்பளிப்புகளை தந்ததாகவும்   அதனை கொண்டு அவர் கொல்கத்தா வந்து ஒரு  restaurant  ஆரம்பித்ததாகவும் அறிகிறார் !   இதற்கிடையில்  நரேந்திரா நாத் பிஸ்வசிடம்  அவருடைய பர்சை  ஒப்படைக்க செல்கிறார்
அங்கே  அவரது தம்பியான்  கிரின் பிஸ்வாசையும் சந்திக்கிறார் ! ஆனால்  இருவரிடமும்  எதற்காக  தாமஸ் கோட்வினின் கல்லறை உடைக்கப்பட்டது என்கிற
மர்மத்தை அறியமுடியவில்லை.  இதற்கிடையில் அவருக்கு கிடைத்த  துப்புகளை  வைத்துகொண்டு புதிரை  அவிழ்க்க  முயல்கிறார்.  இதனிடையே
ஒரு restaurant இல்  பேண்ட் வாத்திய குழுவி(ல்(க்றிஸ் கொடவின்)  என்ற பெயர் அவரை இழுக்கிறது  சென்று விசாரிக்கிறார்  அதில் அவர் தாமஸ் கோட்வினின்  வமசவழி  என்று அறிகிறார்!   அவர் வீட்டுக்கு  சென்று அவர் தந்தையை சந்திக்கிறார்  அவர்  தனது முன்னோரான தாமஸ் கோட்வினின் பொருட்கள் தன்னிடம் இருந்ததாகவும்  அதை மாடி வீட்டில் உள்ள அரகிஸ்  என்பவர் வைத்துள்ளதாகவும்  சொல்கிறார்.
பெலுடா  அந்த பொருட்கள் அடங்கிய பேழையை  அரகிசிடமிருந்து  கவர்ந்து மர்கஸ் கொட்வின்  (க்றிஸ் கோட்வினின் தந்தை ) இடம்  சேர்க்கிறார்!

தாமஸ் கோட்வினின்  மகளான  சார்லோட்டே என்பவர் எழுதிய டைரி கிடைக்கிறது  அதில்  கொட்வின்  சூதாடி சொத்துகளைஇழந்ததாகவும்
நவாப்  தந்த  வைரம் மற்றும் மரகத கற்கள் பதிக்கப்பட்ட  வெள்ளி  பெட்டியும் ஒரு பெரிகல்  ரிபீட்டர்  என ஒன்றையும்  மட்டுமே அவர் தன சொத்தாக  கொண்டதாகவும்  அறிகிறார்  பெலுடா !  பெரிகல்  repeater  என்றால் என்ன  என குழம்புகிறார்  பின்னர் அது  ஒரு கடிகாரத்தை குறிக்கும் சொல் என அறிகிறார்
இதனை ஒட்டி  விசாரிக்க  அவர்  மகாதேவ் சௌதரி என்பவரை சந்திக்கிறார் .
அவர்  perigal  repeater  என்பது  perigal என்பவரால்  கண்டுபிக்கப்பட்ட  கை கடிகாரம் என்றும்  அது தற்காலத்தில் கோடி ரூபாய் மதிப்பு உடையது என்றும்  அறிகிறார்.




இந்த பெரிகல்  repeaterகாகத்தான்  இத்தனை  கலாட்டாவும்  என்பதை உணர்கிறார்  ஆனால் நரேந்திர நாத் ஏன் அன்று செல்ல வேண்டும் என்பதை  கண்டுபிடிக்க
பழைய  நியூஸ் பேப்பரில்  தகவல் சேர்க்கிறார்  பழைய  போடோகளை  வெளியிடும் நிறுவனத்தை சந்தித்து  விவரம் சேர்க்கிறார்  அதில் பல உண்மைகள் அவருக்கு  தெரிய வருகிறது  நரேன்ட்ரநாத் பிஸ்வசிற்கும்  தாமஸ் கொடவின் கும்  என்ன சம்பந்தம்?  நாடு இரவில் அவர் ஏன் போனார்?
உண்மை  குற்ற்றவாளி யார்?   அந்த perigal  ரேபிட்டர் உண்மையான  சொந்தக்காரர்களிடம்  போய் சேர்ந்ததா ? என்பதையும் அவர் உறுதி செய்கிறார்
முடிவில் சுபம் .
 ஒரு நல்ல தரமான  துப்பறியும் நாவலை  படித்த திருப்தி இதில் ஏற்படுகிறது
இந்திய தயாரிப்பு தான் என்றாலும்  குறை சொல்ல  முடியாத எழுது நடை
சித்திரங்களும்  ஈடு கொடுக்கின்றன  இவரது கதைகளை  தமிழில்  கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்பது என் அபிப்ராயம் ! puffin  புக்ஸ்  நிறுவனத்தார்  சில வருடங்களுக்கு  முன்  இதனை வெளியிட்டுள்ளனர் மூல
கதை  சத்யஜித்ரே  சித்திரங்கள்  தபஸ் குஹா  கதையாக்கம்  சுபப்ரா  சென்  குப்தா  நல்ல துப்பறியும் கதைகள் வேண்டுவோருக்கு  இந்த கதை தொடர்கள்
வரப்ப்ரசாதமாக  அமையும்!

2 comments:

  1. aha aha naanthan boss firstu! super comics information! kalakkungal!

    ReplyDelete
  2. நன்றி ஜானி! நீங்க எப்பவும் முந்திடறீங்க!

    ReplyDelete