Monday, February 11, 2013

A PHANTOM'S RARE TALE!

இது எனது முதல் பதிவு  முகமூடி வேதாள ரின்  அருமையானதொரு கதை இது! 10 மற்றும்  11 ஆம்  வேதா ளரின்  வாழ்க்கை .   இனி  கதைக்குள் செல்வோம்! 
நிகழல் காலத்து  வேதாளரிடம்  குரான்  ஒரு சந்தேகத்தை  எழுப்புகிறான் .
அதாவது  10 வது  வேதாள ரின்  காலம் 1758 இல்  முடிகிறது ! ஆனால்  அதற்கு 
ஒரு  வருடம்  முன்பே  அவரது மகன் வேதாள ராக  மாறிவிடுகிறார் . இது எப்படி சாத்தியம் ? ஒரு  வேதாளர் இறந்த  பின்பு  தானே  இன்னொருவர்  வரமுடியம் ?  குரானின் இந்த சந்தேகத்திற்கு வேதாளர்  பதில் சொல்கிறார் .
அதுவே  இந்த கதை !

                      10ஆம்   வேதாளர்  ஒரு பிரெஞ்சு  பெண்மணியை மணந்து கொள்கிறார்  அவர்களுக்கு  ஒரு மகன் உண்டு  க்றிஸ் (11 ஆம்  வேதாளர்)


 ஒரு பொழுதில்  தாயும்  மகனும்  பிரான்சிலிருந்து  கப்பலில் புறப்பட்டு  டென்காலி  (வேதா ளரின்  இருப்பிடம் ) நோக்கி வருகின்றனர் . வழியிலேயே அவர்களை சந்திக்க  வேதாளர் முடிவு செய்கிறார் !   அவரும் ஒரு சிறிய  படகில் புறப்படுகிறார் .  அப்ப்பொழுது  ஒரு ஆபத்தான விவரம் தெரிய  வருகிறது . சிங்க்  பிறேட்ஸ்  எனப்படும் கடல் கொள்ளை காரர்கள்  அந்த  பிரெஞ்சு கப்பலை  முற்றுகை இடுகின்றனர் .  இதனை கண்ட வேதாளர்  புயல் என  பாயிந்து சண்டை இடுகிறார் .  வாள் முனையில்  நிற்கும் கொள்ளை கூட தலைவன்  அவரிடம்  ஒற்றைக்கு ஒற்றை  அழைக்கிறான் . அவரும் ஒத்துக்கொள்கிறார்  ஆனால்  வஞ்சக  கொள்ளைக்காரன்  மறைத்து வைத்திருந்த  துப்பாக்கியை  எடுத்து  அவரை  சுடுகிறான் .  இதனால் அவருக்கு  கண்ணிலும்  கையிலும்  பலத்த  காயம்  ஏற்படுகின்றது . 


படு காயம்   அடைந்த வேதாளரை  அவரது  இருப்பிடத்திற்கு  அழைத்து செல்கின்றனர் .  அங்கே  அவருக்கு சிகிச்சை  அளிக்கபடுகின்றது . அப்போதிருந்த  குரானின் முன்னோர்  ஊரன்  அவருக்கு  சிகிச்சை அளிக்கிறான்  அதில் அவருடைய வலது கையும்  கண்ணும்  இழக்கிறார்!
மிதுந்த மன வேதனை அடையும்  அவர்  தன்  மகனை அழைத்து  உறுதிமொழி 
எடுக்க  சொல்கிறார்  தந்தை படுகையில் இருக்க  மகன்  உறுதி பூண்கிறார் 
11ஆம்  வேதா ளராக  மாறுகிறார் !  இப்படி  ஒரே சமயத்தில்  இரண்டு வேடாளர்கள் உருவாகிறார்கள் !  கையும்  கண்ணையும் இழந்த  வேதாளர்  மனத்திலும்  ஆறா துயர்  கொள்கிறார் .  அவர்   மனம் முழுக்க அந்த கொள்ளை 
 தலைவனை   வாங்க  வே ண்டும்  என்ற  எண்ணமே  நிரம்பி  வழிந்தது!   ஒரு  நாள்  தன வீட்டை விட்டும்  வெளியேறுகிறார் !  தன்  உதவியாளன்  ஊரன்  துணையுடன்  ஒரு மாற  வீட்டில் வசிக்கிறார்  அங்கே  அவருக்கு ஊரன்  ஒரு புது  முகமூடியை தருகிறான்! ( த்ரீ  மசகேடீரஸ்  போல்   தோற்றம்   தரும்)
 அவர்   தீவிர பயிற்சி எடுக்கிறார்  வாள்   வீச்சில் ஒற்றை  கையிலேயே  வல்லவர்  ஆகிறார் .  ஒரு  நாள்  அந்த   கொள்ளை தலைவனை நேரில் சந்திக்க  நாள்   குறிக்கிறார் .   அவனது  இருப்பிடம்\ தெரிந்து  கொண்டு   அவனுக்கு  நேருக்கு நேர்  மோத சவால்  விடுகிறார்.   அந்த  இடம் முதல்  வேதாளர்  கரை ஒதுங்கி  வேடாலராக  உரு மாறிய இடம்  கடற்கரை!  கொள்ளை தலைவனும்  அங்கே வருகினான்!   இதற்கிடையில்  அவரது  மகனான  11ஆம்  வேடாலருக்கும்   தகவல்  பறக்க  அவரும் அங்கே  தன தாயுடன்  வருகிறார்!  கொள்ளை தலைவனுக்கும்   10ஆம்  வேடாலருக்கும்  
 ஆக்ரோஷமான  சண்டை  நடக்கிறது!   சண்டையில்  வேடாலரின்  கை  ஓங்கி  இருக்கும் பொழுது  கடலில் இருந்து  வந்த  OCTOPUS  ஒன்று   கொள்ளை தலைவனை  கபளீகரம்  செய்கிறது!   ஆனால்   அவன்  விழும் முன் 
அவரை சுட்டு விடுகிறான் . இம்முறை  நெஞ்சில்  காயம்  அடைந்த அவர்  தன இறுதி மூச்சு நிற்கும் முன்   தன மகனை அழைத்து  தன்னிடமிருந்த  மண்டை  ஒட்டு  மோதிரத்தை  தருகிறார் .  இனி  மேல்  தான்  அவரது  மகன்  முழுமை வேதா ளராக   செயல்  பட முடியும்!   தன  கடமை முடிந்த  நிறைவுடன்  
கண் மூடுகிறார் !     

இது போன்றதொரு  கதையினை  நான்     படித்ததே இல்லை !   PHANTOM  எனப்படும்   வேதாளரின்   உருக்கமான  கதை   அதிலும்  தந்தைக்கு  முன்  அவர் மகன்  உறுதி மொழி  எடுக்கும்  காட்சி   ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தும் !
CLIMAXIL   அவர்  ஒற்றை கையுடன் மோதும்  காட்சி   அட்டகாசமாய்  இருக்கும் !    வேதாளர்  என்பவர் யாரிடமும்  தோற்றதாய்  சரித்திரம் இருக்க கூடாது  என்ற  நிலையை  அவர் உறுதி படுத்துகிறார்    எங்காவது சந்தர்ப்பம் கிடைத்தால்  இந்த கதையினை  படியுங்கள்  வேதாளரின்  ரசிகர்கள் கண்டிப்பாக   MISS  பண்ண  கூடாத  கதை.!  கதையின்  பெயர்  எ க்ஹோஸ்ட்  WHO  DIE D  TWICE !

5 comments:

  1. Good post friend . Expecting more such good post from you. Is this book available in online stores like flipkart etc

    ReplyDelete
    Replies
    1. இல்லை அருண் பிரசாத்! அதை நான் second hand ஆகத்தான் வாங்கினேன் ! euro கிட்ஸ் பதிப்பகம் westland வெளியிட்டு உள்ளனர் . நீங்கள் சென்னை வாசியாக இருந்தால் லிக் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அருகில் உள்ள செகண்ட் ஹான்ட் கடையில் நிறைய காமிக்ஸ் கிடைக்கிறது
      நேரம் கிடைக்கும் பொது சென்று வாருங்கள். flipk art ல் இப்பொழுது 50 ரூ விலையில்
      பாக்கெட் சைஸ் phantom கதைகள் கிடைக்கிறது இல்லை என்றால் எக்மோர் இந்தியா புக்
      ஹவுஸ் ல் கிடைக்கும் !

      Delete
  2. Nice Post.நல்லதொரு ஆரம்பம்.தொடர்ந்து பல பதிவுகள் இட்டு எங்களை மகிழ்ச்சி படுத்துங்கள்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக கிருஷ்ணா! வரும் காலங்களில் பல நல்ல பதிவுகளை வெளியிட்டு மகிழ்ச்சி அடைய செய்கிறேன் !

      Delete